‘‘எட்டாம் வகுப்பு படிக்கும்போது கோவில்பட்டியிலிருந்து சென்னை மாமா வீட்டிற்கு குடும்பத்துடன் விடுமுறைக்கு வந்திருந்தோம். எல்லோரும் சேர்ந்து மாமல்லபுரம் சென்றோம். மாமா யாஷிகா காமிரா வைத்திருந்தார். காமிரா வழியாக எப்படி தெரியும் என்ற ஆர்வத்தில் அவரிடம் கேட்டேன். கடைசிவரை என்னை தொடக்கூட விடாமல் சீண்டிக் கொண்டே இருந்தார். முதன்முதல் காமிரா காதல் வந்தது இப்படித்தான்,'' என்னும் ப.சொக்கலிங்கம், கால்நடை மருத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் வெளியே எங்கு சென்றாலும் காமிரா இல்லாமல் செல்வதில்லை. இயற்கையை, விலங்குகளை படம் பிடிப்பதில் அதிக ஆர்வமுள்ள இவர் நல்ல புகைப்படத்தில் கிடைக்கும் திருப்தி வேறெதிலும் இல்லை என்கிறார்.
ஆகஸ்ட், 2020.